திருப்புகழ் பாடல் 167 – பழநி
ராகம் – பந்துவராளி; தாளம் – கண்டசாபு (2 1/2)
தனதனனத் தனதனனத் தனதனனத் …… தனதான
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் …… புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் …… கமுமீதே
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் …… றமிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் …… பெறவேணும்
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் …… பொரும்வேலா
கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் …… கிறகோடே
படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் …… கொருபாலா
பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் …… பெருமாளே.