திருப்புகழ் பாடல் 256 – திருத்தணிகை
ராகம் – ஆனந்த பைரவி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் …… தனதான
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங் …… கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ் …… சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் …… றழியாதே
குரவணி நீடும் புமணி நீபங்
குளிர்தொடை நீதந் …… தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் …… தொழும்வேலா
தினைவன மானுங் கநவன மானுஞ்
செறிவுடன் மேவுந் …… திருமார்பா
தலமகள் மீதெண் புலவரு லாவுந்
தணிகையில் வாழ்செங் …… கதிர்வேலா
தனியவர் கூருந் தனிகெட நாளுந்
தனிமயி லேறும் …… பெருமாளே.