திருப்புகழ் பாடல் 303 – குன்றுதோறாடல்
ராகம் – பூர்வி கல்யாணி ; தாளம் – அங்கதாளம் (8)
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனனந் தனன தந்த …… தனதான
அதிருங் கழல்ப ணிந்து …… னடியேனுன்
அபயம் புகுவ தென்று …… நிலைகாண
இதயந் தனிலி ருந்து …… க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க …… அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி …… நடமாடும்
இறைவன் தனது பங்கி …… லுமைபாலா
பதியங் கிலுமி ருந்து …… விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த …… பெருமாளே.