திருப்புகழ் பாடல் 330- காஞ்சீபுரம்
ராகம் – பெஹாக்; தாளம் – அங்கதாளம் (6)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தத்தத் தத்தத் …… தனதான
முட்டுப் பட்டுக் …… கதிதோறும்
முற்றச் சுற்றிப் …… பலநாளும்
தட்டுப் பட்டுச் …… சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் …… கருதாதோ
வட்டப் புட்பத் …… தலமீதே
வைக்கத் தக்கத் …… திருபாதா
கட்டத் தற்றத் …… தருள்வோனே
கச்சிச் சொக்கப் …… பெருமாளே.