சுக்கிரன் மற்றும் கேது இணைவின் பலன் மற்றும் பரிகாரம்
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் கேது சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு, அவருடைய திருமண தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக அமைவது இல்லை. கேதுவானவர் தாம்பத்ய சுகத்தை கெடுப்பார். முப்பிறவியில் தாம்பத்ய கடமையை சரியாக செய்யாதவர்களுக்கு இந்த அமைப்பு உண்டாகும்.
சுக்கிரன் கேது இணைவு தோஷ நிவர்த்தி பரிகாரம்
- திருமணத்தை கோவிலில் நடத்துவது.
- மேலும் வயதான பல தலமுறைகள் கண்ட தீர்க்க சுமங்கலியாக உள்ள பெண்ணின் கையால் தாலி எடுத்து தர சொல்லி தாலி கட்டுவது.
- திருமணத்திற்கு முன் ஸ்ரீசுக்த ஹோமம் செய்வது.
- வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வது.
- சுக்கிரன் மற்றும் கேது இணைவு உள்ள ராசி நாளில், கண்ணாடியில் முகம் பார்த்த பின்பு அந்த கண்ணாடியை உடைத்து விடுவது.
- திருமணப் பெண் மேக்கப் இல்லாமல் இயற்கையான அழகுடன் திருமணம் புரிவது.
- திருச்செந்தூர் வள்ளி குகையில் வழிபாடு செய்வது.