Puthan Dasa Palangal in Tamil | புதன் பலன்கள்

Puthan Dasa Palangal in Tamil | புதன் பலன்கள்

ஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்

நவ கிரகங்களில் புதன் புத்திகாரன் என்று அழைக்கப்படுகிறார். புதன் கிரகம், அறிவு, பொது அறிவு, கல்வி அறிவு, கல்வியில் ஞானம், யூகம், புத்திசாலி தனம், தெளிவாக பேசுவர், விகடம் பேசியே வெற்றி காணுகின்ற இனிய இயல்பு, இனிமையான பேச்சு, மென்மையான பேச்சு, பேச்ச்சில் பெருந்தன்மை, பேச்சில் அனைவரையும் கவருதல், பளிச்சென்ற உச்சரிப்பு, நகைச்சுவை ததும்பும் நயமான பேச்சு, எதையும் எளிமையாகவே எடுத்துக் கொள்ளும் உள்ளமும், இரு பொருள் படப் பேசும் திறன், எழுத்துத் திறமை, நடுநிலைமை, தர்க்கம் செய்வதில் ஆற்றல், சிரித்த முகம், சீரிய பார்வை, பலா சுளை பேச்சு, கண்களால் பேசி கவி நடை வீசி மயக்கும் தன்மை இவையெல்லாம் புதன் கொடுப்பார்.

 • கால புருஷ ராசியில் புதனுக்கு மிதுனம் மற்றும் கன்னி ஆகிய இரண்டு ராசி வீடுகள் உண்டு. இதில் கன்னியில் புதனுக்கு ஆட்சி, மூலத்திரிகோணம், உச்சம் ஆகிய மூன்று நிலைகள் உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் கன்னியில்
 • புதன் உச்சம் பெற்று இருந்தால் உயர்ந்த பண்புடையவராக இருப்பார்.
 • மன்னிக்கும் சுபாமுள்ளவராகவும் இருப்பார்.
 • வாதத்தில் யாரையும் வெல்லும் பாரக்கிரமத்தை பெற்று இருப்பார்.
 • அஞ்சாமல் வாதிக்கக் கூடியவர்.
 • இலக்கிய கர்த்தாகவாகவும், இலக்கிய விமர்சகராகவும், கைத்திறன் மற்றும் கலை இரண்டிலும் ஆற்றல் உடையவராக திகழ்வார்.

கன்னியில் உச்ச பாகையில் இல்லாமல் மற்ற பாகையில் இருந்தால்

 • அந்த ஜாதகர் கல்வி ஞானமும், எழுத்தாற்றல், சிறந்த பேச்சாளாராகவும்,
 • கருத்தைக் கச்சிதமாகவும் விளக்கும் ஆற்றல் பெற்றவராகவும்,
 • நுண்கலைகளில் தேர்ச்சி உடையவராகவும்,
 • நடுநிலை உடையவராகவும்,
 • பெருந்தன்மை உடையராகவும்,
 • அற்பத்தனம் இன்றி வாழ்வார்.
 • அழகாக உடை உடுத்துவார்.
 • அரசியல் துறைகளிலும், நண்பர்களால் ஆதாயமும், சுதந்திர முள்ளவராகவும் திகழ்வார்.
 • வர்த்தகத் தொழில் வளமும் அமையும்.
 • ஒருவர் ஜெனன ஜாதகத்தில் புதனுக்கு குருவின் பார்வை பெற்ற ஜாதகர் கல்வியில் சிறப்பாக இருப்பதையும், புத்திசாலியாகவும், சரளமாக பேசும் திறனும் இருப்பதை அறிய முடியும்.
 • புதன் கேது சேர்க்கை நுண்ணிய அறிவைக்காட்டும். மற்றும் துறவிகளையும் காட்டும்.
 • குரு புதன் அல்லது புதன் சனி இணைவு உள்ள ஜாதகர் இலாப நோக்கம் இன்றி எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்.
 • சூரியன் புதன் சேர்க்கை விசாலமான அறிவு உடையவராக இருப்பார்கள்

புதனின் காரகங்கள்

முதன்மை கிரகமான சூரியனிடமிருந்து அதிகமாக ஒளியை பெறும் கிரகம் புதன் ஆவார். புதன் மிகச் சிறிய கிரகம்.

 • இளமையான கிரகம் அர்த்தனாரி ஈஸ்வரன் சங்க நாராயணன், விஷ்ணு, பச்சை நிறம் – புதன் காரகம்.
 • பசுமையான இடங்கள் எல்லாம் புதன் காரகம்.
 • தளிர் இலைகள்
 • புதன் கலகலப்பானவன் அரட்டை அடிப்பவர்
 • மரகதப்பச்சை
 • துளசி
 • மரிக் கொழுந்து
 • கிளி
 • பச்சை நிறம் விஷயங்கள்

கிரகங்களில் புதன் ஒருவர் மட்டும் தான் தன் வீட்டில் உச்சம் பெறுகிறார். உலகம் அனைத்தும் காப்பாற்றக் கூடியவர். மகா விஷ்ணு. அவர் அடுத்த வீட்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அறிவு செல்வம் உடைய புத்திசாலி பொருள் செல்வத்தின் மீது ஆசைப்படுவதில்லை. ஆகவே பொருள் செல்வத்திற்கு அதிபதியான சுக்ரனை தன் வீட்டில் நீசம் அடைய செய்கிறார்.

புதனுக்குரிய பரிகாரம்:

 • புதன் வலுவடைய மதுரை மீனாட்சி சொக்கநாதரையும்,
 • திருப்பதிபெருமாள்,
 • குருவாயூர் கிருஷ்ணரையும் வழிபடலாம்