ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் ரிஷபம் | Rishabam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil

Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள்

நவக்கிரகங்களில் சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் கிரகங்கள் ராகுவும் கேதுவும். இவ்விரு நிழல் கிரகங்களுக்கு தனி வீடுகள் என்பது கிடையாது. ஆகவே இந்த கிரகங்கள் 12 ராசி வீடுகளில் எந்த வீட்டில் இருக்கின்றனரோ அந்த வீட்டின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வார்கள். போக காரகனான ராகுவும்,ஞான காரகன் ஆன கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து இருக்கின்ற வீடுகளுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள்.

அந்தவகையில்,ராகு பகவான் தற்போது மேஷ ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை மீன ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்,
கேது பகவான் தற்போது துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 30 ம் தேதிக்கு பிறகு துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் அதாவது 2025 மே மாதம் வரை கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.

சர்ப்ப கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள். அத்தகைய ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 ரிஷப ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை அளிக்கப் போகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Rishabam Rahu Ketu Peyarchi 2023 to 2025 Palan in Tamil | ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 பலன்கள் ரிஷபம்

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – ரிஷபம்

2023 இல் நிகழும் ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு, செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். மனதில் ஏற்படும் தாழ்வு மனப்பானை நீங்கும். மனதில் நினைத்ததை செய்து முடிக்கும் தன்னம்பிக்கை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கேளிக்கை சம்மந்தமான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மனப்பக்குவம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – ரிஷபம் பொருளாதாரம் எப்படி இருக்கும்

நிலுவையில் இருந்து வந்த தனவரவு கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பணவரவில் இருந்த இழுவைகள் நீங்கும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைக்கு எதிர்பார்த்த தீர்வு கிடைக்கும்.

கடன் பிரச்சனைகள் தீரும். வீடு,மனை வாங்கும் முயற்சியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – ரிஷபம் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்

வீட்டில் இருப்பவர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவி இடையே தேவையற்ற விவாதத்தை குறைப்பது நல்லது. வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – ரிஷபம் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பழைய நினைவுகளால் மன வருத்தங்கள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக உடலில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாகன பயணங்களில் அதிக கவனம் வேண்டும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – ரிஷபம் உத்தியோகம் வேலை எப்படி இருக்கும்

உத்தியோக பணியில் இருந்து வந்த சுமைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். வேலை மாற்றத்திற்காக பல நாட்களாக காத்திருந்தாள் அது நிறைவேறும். மற்றவர்களை சாராமல் முடிவு எடுப்பது நல்லது. வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த இழுபறிக்கு நீங்கும். எந்த தொழில் செய்தால் அதில் பெரிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையாட்களிடம் பொறுமையுடன் நடந்துகொள்ளவும்.

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023-2025 – ரிஷபம் விவசயாம் எப்படி இருக்கும்

பயிர்களுக்கு சரியான உரம்,மருந்தினை பயன்படுத்துவன் மூலம் லாபம் அதிகரிக்கும். குறுகிய காலம் பயிர்களை விளைச்சல் செய்வதால் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் சுறுசுறுப்புடன் பங்கேற்பீர்கள். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். ஏதும் செய்ய முடியும் என்னும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும் போது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும்.

ரிஷபம் ராகு கேது பெயர்ச்சி 2023-2025 பரிகாரம்:

  • வெள்ளிக்கிழமையில் குலதெய்வத்தை வணங்குவதன் மூலம் செயல்பாடுகளில் இருக்கும் தடை தாமதங்கள் நீங்கும்.
  • பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மற்றவர்களின் பேச்சை கெட்டு செயல்படாமல் இருத்தல் நலம்.
  • மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற உதவிகள் செய்வது நல்லது.
  • கோவில் நலப்பணிகளில் ஈடுபடுவது நன்மை பயக்கும்.

ராகு கேது பெயர்ச்சி 2023, 2024 எப்போது