Sani Peyarchi 2017 to 2020 Predictions for Virgo Sign

2017 சனிப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? 30/100

2017 சனிப்பெயர்ச்சி எப்போது?

When is Sani Peyarchi in 2017?

2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் – அனைத்து ராசிகளுக்கும்

சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளும் கன்னி ராசிக்காரர்களே…

உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தவிர்க்கமுடியாத செலவுகள் அதிகரிக்கும்.

மற்றவர்களை நம்பி முக்கியப் பொறுப்பு களை ஒப்படைக்கவேண்டாம். வீடு வாங்குவது விற்பது இழுபறியாகித்தான் முடியும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்க்கவும். அதிக வட்டிக்குக் கடன் வாங்கவேண்டாம். இரவு நேரப் பயணங்களில் கவனமாக இருக்கவும். விலை உயர்ந்த பொருள்களை இரவல் தருவதையும் வாங்குவதையும் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிக்கு இடையேயான பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். உரிய அனுமதி பெற்ற பிறகு வீடு கட்டும் பணியைத் தொடங்கவும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், அவ்வப்போது சோர்வு வந்து நீங்கும். கோபம் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் புது பொறுப்புகளும் தரப்படும்.

வியாபாரத்தில், போட்டிகள் அதிகரிக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். பங்குதாரர்களிடையே அவ்வப்போது கருத்து வேறு பாடுகள் ஏற்பட்டாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவார்கள். பணியாட்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். எலெக்ட் ரானிக்ஸ், கணினி, மூலிகை வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளைக் கடந்து முன்னேறுவீர்கள். மேலதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். சிலருக்கு ஏமாற்றங்களும் மறைமுக அவமானங்களும் ஏற்பட்டு நீங்கும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு கண்களில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கம் வேண்டாம். கலைத் துறையினருக்கு வேற்று மொழி பேசுபவர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு வாழும் வகையைக் கற்பிப்பதாக அமையும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்க நகைகளின் சேர்க்கை உண்டாகும். உத்திரம் 2,3,4 மற்றும் சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் உண்டாகும். ஆனால், அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணைவரை அனுசரித்து செல்லவும்.

உங்களின் தன – பாக்கியாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், இக்காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும். பெருந்தன்மையாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்திரம் 2,3,4-ம் பாதம் மற்றும் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முன்கோபம் அதிகரிக்கும். 25.2.20 முதல் 16.7.20 மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான், உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், அரைகுறை யாக நின்ற வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். சொத்து பிரச்னை சுமுகமாகும். அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும். உத்திரம் 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல்கள் உருவாகும்.

சனிபகவானின் வக்கிர சஞ்சாரம்:

29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள்.

சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிர மாகி செல்வதால், வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயாரின் உடல் நலத்தில் அக்கறைக் காட்டுங்கள்.

பரிகாரம்:

திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், வேலூர் மாவட்டம் பெரியமணலி எனும் ஊரில் அருளும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.

Source: Vikatan.com