ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா – Hari Hara Sudhane Aanandha Rooba

சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா!
வரணும் ஐயப்பா இப்போ
வரணும் ஐயப்பா!

ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா
சரணம் ஐயப்பா!
சபரி கிரீசா சத்ய ஸ்வரூபா
சரணம் ஐயப்பா!

எருமேலி வாசா ஏழை பங்காளா
சரணம் ஐயப்பா!
கரிமேலி சாஸ்தா கலியுக வரதா
சரணம் ஐயப்பா!

காடும் மேடும் நடந்து வந்தோம்
சரணம் ஐயப்பா!
கல்லும் முள்ளும் கடந்து வந்தோம்
சரணம் ஐயப்பா!

கல்லாம் உள்ளம் கனியச் செய்வாய்
சரணம் ஐயப்பா!
கனியின் சுவையாய் நீயே வருவாய்
சரணம் ஐயப்பா!

புலியின் பாலைக் கொண்டு வந்தாயே
சரணம் ஐயப்பா!
எங்கள் கிலியினை நீக்கி அருளிடு வாயே
சரணம் ஐயப்பா!

இருமுடி தாங்கி வந்தோம் அப்பா
சரணம் ஐயப்பா!
இருவினை அழித்து அருள் புரிவாயே
சரணம் ஐயப்பா!

நெய் அபிஷேகம் ஏற்றுக் கொள்வாயே
சரணம் ஐயப்பா!
நிலையாய் நெஞ்சில் குடியிருப்பாயே
சரணம் ஐயப்பா!

வேண்டும் யாவும் கொடுத்திடு வாயே
சரணம் ஐயப்பா!
எதும் வேண்டாத உள்ளம் தந்திடுவாயே சரணம் ஐயப்பா!

பக்தரின் குறைகள் தீர்த்திடுவாயே
சரணம் ஐயப்பா!
குறையே இல்லா பக்தியைத் தருவாய்
சரணம் ஐயப்பா!

சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா!
வரணும் ஐயப்பா இப்போ
வரணும் ஐயப்பா!