ஆழி பூஜைக்கு கற்பூரம் கொண்டு வரும்
ஆகாய பவனி வரும் மேகங்களே
ஆகம சமத்துவ பிரணவ சொரூபன்
ஆனந்த திண்மயரூபன்
ஐயனின் திருப்பாதம் தொழுதி வேண்டும் (ஆழி)
அழுதையில் ஐயனை தொழுதால் பின்னே
எரிமேலி வாபரைத் தொழுவாய் (அழுதை)
அம்பலர் குலப்பட்ட ஆலங்காட்டாரின்
ஆவேச பேட்டை துள்ளல் பார்க்க வேண்டும்
அம்பலர் குலப்பட்ட ஆலங்காட்டாரின்
ஆவேச பேட்டை துள்ளன் ஆனந்தமே (ஆழி)
பம்பா தீரத்தில் விரியும் தீர்த்தமும்
பம்ப விளக்குகள் பரவசமே (பம்பா)
சன்னிதானத்தில் பொன்னாதிக்க சந்திரனும்
ஒளி நெய்யால் அபிஷேகம் பார்த்ததுண்டோ (சன்னி) (ஆழி)