ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா
ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா
மாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள்
மாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம்
கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை
கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை
மணிகண்டன் வாழும் மலை – பக்தர்
பல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்து
சரணம் முழங்கும் மலை – சுவாமி சரணம் முழங்கும்மலை
என் ஐயா பொன் ஐயா என் ஐயா ஐயப்பனே
சரணம் சரணம் சரணம் சாமியே (கன்னி)
கௌரீசன் தன்மகனாம்
கலிகால தெய்வமவன்
பம்பா நதிக்கரையில் பிறந்தானே ஐயன் ஐயன்
வேட்டையாடும் மன்னனவன் காட்டினிலே சென்ற நேரம்
கண்டெடுத்து ஐயனை வளர்த்தானே
என் ஐயா பொன்ஐயா என் ஐயா ஐயப்பனே
சரணம் சரணம் சரணம் சாமியே (கன்னி)
வில்லாளி வீரனாகி வீரமணிகண்டனாகி
புலிவாகனனாகி சுவாமி மகிஷிமர்த்தனனாகி
ஏழுமலை தாண்டி ஐயன் சபரிமலை மேலமர்ந்தான்
நாம் அவனை போற்றி நலம் பெறுவோம்
என் ஐயா பொன்ஐயா என் ஐயா ஐயப்பனே
சரணம் சரணம் சரணம் சாமியே (கன்னிமலை)
கன்னிகட்டு நிறைவு செய்தவர்
கரிமலை நீலிமலை கடந்து வருபவர்
பதினெட்டாம் படி ஏறி வருபவர்
சரணம் முழங்கி ஆடிப்பாடி வருபவர்
மோட்சம் பெற முக்தி பெற பாட்டுப்பாடி
துள்ளி ஆடும் சாமி பக்தருக்குள் புரிவான்
என்ஐயா பொன்ஐயா என்ஐயா ஐயப்பனே
சரணம் சரணம் சரணம் சாமியே (கன்னிமலை)