மகமாயி சமயபுரத்தாயே – உன்
மகளெனக்கு எல்லாமும் நியே
கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்
தரும் குங்குமத்தான் மங்கையர்க்கு காவல் (மகமாயி)
கண்கொடுக்கும் கண்ணபுர தேவி
அருள் தருவாள் இமயமலைச் செல்வி
மூவிலை வேல் கைகொண்ட காளி
பகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி (மகமாயி)
வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு – அது
வினைதீர்க்க நீ அமைந்த கூடு
திருநீறே அம்மா உன் மருந்து – அதை
அணிந்தாலே நோய் ஓடும் பறந்து
பெற்றவளே நீ அறிவாய் என்னை உன்
பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை
கற்றகலை சிறு துளியே எனக்கு – அதை
கடலாக்கி வைத்த புகழ் உனக்கு (மகமாயி)