சங்கராய சங்கராய சங்கராய மங்களம்

சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம்
தத்தோத்ராய மங்களம்
கஜானனாய மங்களம்
ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம்
வேணு க்ருஷ்ண மங்களம்
சீதாராம மங்களம்
ராதா க்ருஷ்ண மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை
அன்பினிற்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுள்ளே விளங்கும் எங்கள் ஈஸ்வரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற் சிவைக்கு மங்களம்
தாழ்வில்லாத தன்மையும் தளர்ச்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியிலே கசிந் தலைந்து பாடுகின்ற பாண்மையும்
பாடுவோருக்கு ஞான போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்து இயற்கையான சக்தியை
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாம கீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெல்லாம் விளங்கவும்
ஞான தீபமேற்றி என்றும் நாம கீதம் பாடுவோம்
தர்ம சக்தி வாழ்கவென்று சந்தகம் கொண்டாடுவோம்
கீழ் வரும் 4 கந்த புராணம் வரிகளும் சேர்த்துக் கொள்ளலாம்
———————————————————————————————-
வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.
கண்களை மூடி இருதய கமலத்தில் அம்பிகை வீற்றிருப்பதை கண்டு மனதார வணங்கி பிரார்த்தனை செய்யவும் .
எல்லோரும் சுகமாக வாழ்க …
எல்லோரும் நோயின்றி வாழ்க …
எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக …
என வணங்கி இரண்டு நிமிடம் தியானம் செய்யவும் .
“ஹரி ஓம் தத் சத் ” எனக் கூறி தியானத்தை நிறைவு செய்யவும் .
ஓம் சக்தி …. ஓம் சக்தி …. ஓம் ….
DivineInfoGuru.com