காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை கன்னிமூல கணபதியே
காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை
கன்னிமூல கணபதியே நீ
பாத்து இரட்சிக்கணும் பரிவு காட்டணும்
கன்னிமூல கணபதியே
காத்து இரட்சிக்கணும் கருணை காட்டணும்
பொன்னு பகவதியே அம்மா பொன்னு பகவதியே
மாளிகை புறத்து மஞ்சம்மா
மாணிக்க பாதம் தஞ்சம் அம்மா
நெய் மணக்குது மெய்யிருக்குது சபரிமலையிலே
அய்யனே உந்தன் அழகைக் கண்டால்
பக்தி பிறக்குது உள்ளத்திலே ஞான சக்தி பிறக்குது
நெய்யபிஷேகம் செய்யும்போது உள்ளத்திலே
மெய் சிலிர்க்குது மலையிலே
தையினிலே உந்தன் சந்நதிகாண
உள்ளத்தில் ஆவல் பொங்கிடுதே
சத்தியமான பொன்னு பதினெட்டு படி பகவானே
சுவாமி பொன்னு பகவானே அய்யா பொன்னு பகவானே
ஷண்முகன் தம்பியே உந்தன் தரிசனம் கிடைக்கவேணுமே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
என்று சொல்லி நாங்கள் வந்தோமே
சங்கர மோகினி பாலனே உந்தன்
தரிசனம் தனைக்காண தயை புரிவாய் தேவனே
தயை புரிவாய் தேவியே
ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஐயப்ப சரணம் ஐயப்பா