கலியுக தவயோகி ஞானமூர்த்தி – நிலா
கலபத்தி லாராடும் சக்ரவர்த்தி (கலியுக)
தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின்
தாரகைப் பூக்களால் புடை சூழும் பகவானின்
அர்ச்சனை மந்திரம் அருள்நிதியே (கலியுக)
கார்த்திகை பௌர்ணமி மணம் வீசும் திருநீரால்
கலியுக மூர்த்திக்கு அலங்காரம் (கார்த்திகை)
நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில்
நம்பிடும் அடியவரின் உள்ளொளி மேடையில்
வீரத மகத்துவம் சுதி மீட்டும்
உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா
உண்ணாமனுசி ஐயப்பா உள்ளம் இனிக்குது ஐயப்பா
ஒளியாய் உயிராய் ஒளியாய் உலகாய்
ஒளியாய் உயிராய் ஒளியாய் உலகாய்
ஒப்பிலா மணியான நீ சுவாமி (கலியுக)
இந்திராதி தேவர்கள் ஐயன் திருநடையில்
கற்பூர ஆவிகூட்டி கைதொழுவார் (இந்திராதி)
இருவினையைக் காலம் இருமுடிக் கட்டாக்கி
இருவினையைக் காலம் இருமுடிக் கட்டாக்கி
இடிமேள தாளத்தில் படி பூஜை
மனதில் விளையாடும் யைப்பா மகரஜோதி நீ ஐயப்பா
மனதில் விளையாடும் யைப்பா மகரஜோதி நீ ஐயப்பா
தலையாய் மொழியாய் கவியாய் இசையாய்
தலையாய் மொழியாய் கவியாய் இசையாய்
பதினெட்டுப்படி தத்வமே சுவாமி (கலியுக)