Kannimalai Sami Saranam – Ayyappan Songs

கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி
கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி
பள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலையும் ஏறி
பள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலையும் ஏறி
பதினெட்டாம்படி நடந்து போவது எப்போது
மண்டல விளக்குக்கோ மகர விளக்குக்கோ
ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம்
அதிகாலை களிச்செழுந்து புலிவாகனனை போற்றி
ஒரு நூறு சரணங்கள் நீங்க அழைச்சு
குருத்தோலை பந்தலிட்டு இருமுடிகள் நிறைச்சுவச்சு
திருயாத்திரைக்காக நீங்கள் விரைந்து செல்லணும்
ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம்
ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம்

 

எரிமேலி அம்பலத்தில் கட்டை இறக்கணும் – நீங்க
நீறுபூசி பாட்டுப்பாடி பேட்டை துள்ளனும்
சிறுகுழலில் ஒன்று சேர்ந்து பஜனை பாடனும் – பின்பு
காடுமேடு தாண்டி அங்கு பம்பை சேரனும்
ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம்
ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம்

 

கணபதிக்கு தேங்காயை உடைச்சிடனும் – பின்பு
இருமுடிகள் தாங்கி நீங்க மலையேறனும்
பதினெட்டாம் படியேறி ஐயனைக் காணனும் – அங்கு
அபிஷேகம் எல்லாம் வணங்கி மகிழனும்
ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம்
ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம் (8 முறை)