வழிவிடு நந்தி வழிவிடுவே | Vazhi Vidu Nandi Lyrics in Tamil

நந்திதேவர் வணக்கம் | வழிவிடு நந்தி வழிவிடுவே | Vazhi Vidu Nandi Lyrics in Tamil

(ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என்ற மெட்டு)

வழிவிடு நந்தி வழிவிடுவே
வாழ்வில் நாங்கள் வளர்ந்துயர
வழிவிடு நந்தி ! வழிவிடுவே
வையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு)

எம்பிரான் சிவனைச் சுமப்பவனே
எல்லா நலனும் தருபவனே
ஏழைகள் வாழ்வில் இருளகல
என்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு)

நீரில் என்றும் குளிப்பவனே
நெய்யில் என்றும் மகிழ்பவனே
பொய்யில்லாத வாழ்வு தர
பொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு)

உந்தன் கொம்பு இரண்டிடையே
உமையாள் பாகன் காட்சிதர
தேவர் எல்லாம் அருள் பெற்றார்
தேனாய் இனிக்கும் செய்தி அப்பா. (வழிவிடு)

தேடிய பலனைத் தந்திடுவாய்
தேவர் போற்றும் நந்திதேவா !
வாழ்வில் வளமே வந்துயர
வழியே காட்டி அமைந்திடுவாய். (வழிவிடு)

நந்தனார் போற்றும் நந்தி தேவா !
நாலுந் தெரிந்த வல்லவனே
எம்பிரான் அருளை எமக்கருள
என்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)

பிரதோஷம் என்றால் உன் மகிமை
பெரிதும் வெளியில் தெரிந்திடுமே
தேவர்க்குக் காட்சி உன்மூலம்
தெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)

பிரதோஷ நந்தி பாடல்கள் | Pradosha Nandi Padal