சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சாமி பாதம் ஐயப்பன் பாதம்
தேகபலம் தா பாதபலம் தா
கள்ளும் முள்ளும் காலுக்குமெத்தை
சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும்
சரணம் சரணம் சாமிசரணம்
சரணம் சரணம் ஐயப்பசரணம்
கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்
ஆட்டமாடிட சாமி பாட்டுப்பாடிட
சாமிசரணம் ஐயப்ப சரணம்
வந்தோம் ஐயப்பா சாமி ஐயப்பா (கொட்டி)
சமதர்ம சாஸ்தாவைப் பாடிட தர்மமும் செழித்து ஓங்கி ஆடிடும்
சாமியே சரணம் ஐயப்பா
புவிமேல் அவன்புகழைப்பாடிட பூவுலகம் மகிழ்ந்து எங்கும் ஆடிடும்
சந்தனகுங்கும வாசனைகமழ சந்தங்கள் பாடுவோம்
தாளங்கள் தட்டிட நாதங்கள் முழங்க பாதம் போற்றுவோம் (கொட்டி)
தென்றலில் மலரின்மணம் வீசிட வளங்கள் செழித்து நிறையும் எங்குமே
சாமியே சரணம் ஐயப்பா
சிந்தையில் ஹரிகரசுதன் வந்திட செல்வங்கள் பெருகிடுமே நாளுமே
பந்தளன் கண்ட இளம் தத்துவப்பிள்ளையை சந்ததியும் துதிப்போம்
காந்த மலைதனில் ஜோதிமயமாக காட்சி தந்திடய்யா (கொட்டி)