சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும்
சபரிமலை சென்று தரிசனம் பார்த்தாலும்
தாளாது என் ஆசை ஐயப்பா
தாளாது என் ஆசை ஐயப்பா
பண்பான பக்தர்கள் இல்லாததால் இங்கு
பசிப்பிணி வாட்டுதே ஐயப்பா.
சேயாக நீயும் குருவாக நானும்
கூட்டி வந்தேனே ஐயப்பா
தீராது தீராது சொன்னாலும் தீராது
தீர்க்கும் வழியென்ன ஐயப்பா.
அறியாத பக்தர்க்கு மனதோடு உறவாடி
அறிவை கொடுத்து அறிய வையப்பா
மனமிருந்தால் வழி பிறக்கும்
அருளிருந்தால் உனை அறிந்திடுவேன்
தர்ம சாஸ்தாவே சபரி ஐயப்பா.