சபரிமலைவாசா தேவா சரணம் நீ ஐயப்பா – தேவா
சபரிமலைவாசா தேவா சரணம் நீ ஐயப்பா – தேவா
உறவு எல்லாம் சுவாமி உண்மையில்லை சுவாமி
உறவு எல்லாம் இங்கே உண்மையில்லை
பிறவிப் பயன் பெற அருள் ஈசா ( சபரிமலை)
வாழ்க்கை எனும் பயணம் காரிருளில் ஐயா
வழி அறியாதலையும் நேரம் – உன்
திருதீபத்தின் பொன்னொளி காட்டியே
அருள்மழை பொழிகுவாய் ஐயப்பா – உன்னை
அடைந்திட வழி செய்வாய் மெய்யப்பா (சபரிமலை)
சொந்தபந்தங்கள் காத்திட அலையும்
வாழ்க்கையை வாழ்ந்திடல் தேவையோ
சூன்யமன்றோ கானல் நீரல்லவோ வாழ்க்கை
நித்தியமானவன் நீயன்றோ என்றும்
சத்தியமானவன் நீயன்றோ (சபரிமலை)