சுவாமியே சரணம் ஐயப்பசரணம்
சுவாமியே சரணம் ஐயப்பசரணம்
பம்பாநதியில் தீர்த்தமாடி வந்தோமே
அருள் நாடியே ஐயப்பா சுவாமியே (சுவாமியே)
பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம்
நெய்யாலுருகி மின்னும் ஜோதி பொன்னார் மேனியிலே
மெய்யாலுருகி சரணம் சொல்லி அழைத்த வேளையிலே
சாந்த வடிவாய் வருகிறான் ஐயப்பா சுவாமியே (சுவாமியே)
பம்பா நதியில் தீர்த்தமாடி வந்தோம் ஐயா
சரணம் சரணம் என்றே ஒலிக்கும் உன் சபரிமலையினிலே
தரணி எங்கும் தழைத்து ஓங்கும் கருணைப் பார்வையிலே
ஞானவடிவாய் வருகிறாய் இறைவா சுவாமியே (சுவாமியே)