சுவாமி என் ஜீவ வீணை – நீ
மீட்டும் நாதம் என் ஜென்ம பாக்யம்
நாவினில் இனித்திடும் கானம்
அற்புத கானம் ஐயப்ப கானம் (சுவாமி)
பிறந்தவன் மனதில் மறதி திரையிட புகுந்தது
அனித்திய பாசங்களே மாய பாசங்களே (பிறந்தவன்)
சங்கமமாகும் ஆத்மாவின் இருப்பிடம்
உன் கோவில் வாசலிலே – தேவா
சங்கமமாகும் ஆத்மாவின் இருப்பிடம்
உன் கோவில் வாசலிலே இறைவா
உன் கோவில் வாசலிலே ( சுவாமி)
அலைந்திடும் மனதினை ஒரு வழி கூட்டும்
பகவான் இசைஞான திருக்கோலமே – சுவாமி
திருக்கோலமே (அலைந்திடும்)
பஞ்ச பூதங்களை சுருதி லயத்தோடு சேர்க்கும்
மெய் ஞான ராக ரபா (பஞ்ச)
எல்லாம் நீ மீட்டும் வீணையின் நாதம் (சுவாமி)