திருப்புகழ் பாடல் 5 – Thiruppugazh Song 5 – Vidamadaisu Velai – Vinayakar Paadal

திருப்புகழ் பாடல் 5 – விநாயகர்
ராகம் – கெளளை; தாளம் – திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2)

தனதனன தான தனதனன தான
தனதனன தான …… தனதான

விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண …… மெனவேதான்

விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின் விளை வேதும் …… அறியாதே

கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி …… வறிதாய

கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர …… அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை …… அறியாதே

இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம …… முறைகூற

அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் …… அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை …… முகவோனே.