திருப்புகழ் பாடல் 30 – Thiruppugazh Song 30 – அனைவரு மருண்டருண்டு: Anaivarum Marundarundu

திருப்புகழ் பாடல் 30 – திருச்செந்தூர்
ராகம் – மோகனம்; தாளம் – அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த
தனதன தனந்த தந்த …… தனதான

அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅடி பின்தொ டர்ந்து …… பிணநாறும்

அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு
மவலவுட லஞ்சு மந்து …… தடுமாறி

மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
மனவழி திரிந்து மங்கும் …… வசைதீர

மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
மலரடி வணங்க என்று …… பெறுவேனோ

தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
திகழிரு தனம்பு ணர்ந்த …… திருமார்பா

ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
திகிரிவலம் வந்த செம்பொன் …… மயில்வீரா

இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
இறைவகுக கந்த என்று …… மிளையோனே

எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு
மிமையவரை யஞ்ச லென்ற …… பெருமாளே.