திருப்புகழ் பாடல் 103 – திருச்செந்தூர்
தந்த தானன தானன
தந்த தானன தானன
தந்த தானன தானன …… தனதான
வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு
வின்ப சாகர மோவடு …… வகிரோமுன்
வெந்து போன புராதன சம்ப ராரி புராரியை
வென்ற சாயக மோகரு …… விளையோகண்
தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத
சங்க மாதர் பயோதர …… மதில்மூழ்கு
சங்கை யோர்விரு கூதள கந்த மாலிகை தோய்தரு
தண்டை சேர்கழ லீவது …… மொருநாளே
பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர்
பண்டு போலம ராவதி …… குடியேறப்
பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை
பங்க நீறெழ வேல்விடு …… மிளையோனே
செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி
திங்கள் சூடிய நாயகர் …… பெருவாழ்வே
செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு
செந்தில் மாநகர் மேவிய …… பெருமாளே.