Thiruppugazh Song 104 – திருப்புகழ் பாடல் 104

திருப்புகழ் பாடல் 104 – பழநி

தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன
தனதன தத்தா தத்தன …… தனதான

அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
மறிவிலி வித்தா ரத்தன …… மவிகார

அகில்கமழ் கத்து ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள
வருள்பவர் நட்பே கொட்புறு …… மொருபோதன்

பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய
பரமம யச்சோ திச்சிவ …… மயமாநின்

பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு
ரவுபயில் நற்றாள் பற்றுவ …… தொருநாளே

புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்
பொடிகொடு புற்பாய் சுற்றிகள் …… கழுவேறப்

பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை
புலவரில் நக்கீ ரர்க்குத …… வியவேளே

இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்
எழுபுவி துய்த்தார் மைத்துனர் …… மதலாய்வென்

றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை
யெழுதிவ னத்தே யெற்றிய …… பெருமாளே.