Thiruppugazh Song 114- திருப்புகழ் பாடல் 114

திருப்புகழ் பாடல் 114 – பழநி
ராகம் – மோகனம் / நாட்டைகுறிஞ்சி; தாளம் – கண்டசாபு (2 1/2)

தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன …… தந்ததான

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் …… என்றுபூதி

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய …… தென்றுநாளும்

ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன …… தென்றுமோதும்

ஏழைகள் வியாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு …… மென்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை …… தந்தவேளே

நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும …… டங்கல்வேலா

சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி …… அண்டகூடஞ்

சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக …… தம்பிரானே.