திருப்புகழ் பாடல் 124 – பழநி
ராகம் – ஹிந்தோளம்; தாளம் – அங்கதாளம் (5)
தக திமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 (திஸ்ர ரூபகம்)
தனதன தனன தான தனதன தனன தான
தனதன தனன தான …… தனதான
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத …… பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ …… ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல …… மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத …… மருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான …… குருநாதன்
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருள நாத …… னருள்பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளேழ விடுமெய்ஞ் ஞான …… அயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு …… பெருமாளே.