திருப்புகழ் பாடல் 131 – பழநி
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் …… தனதான
கரியிணை கோடெனத் தனமசைத் தாடிநற்
கயல்விழிப் பார்வையிற் …… பொருள்பேசிக்
கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்
கலதியிட் டேயழைத் …… தணையூடே
செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்
றிறமளித் தேபொருட் …… பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதபத் தேபதித் …… தருள்வாயே
திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்
சிறிதருட் டேவருட் …… புதல்வோனே
திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்
திருடர்கெட் டோ டவிட் …… டிடும்வேலா
பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்
படியினிட் டேகுரக் …… கினமாடும்
பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்
பரிவுறச் சேர்மணப் …… பெருமாளே.