திருப்புகழ் பாடல் 162 – பழநி
ராகம் – பிலஹரி ; தாளம் – அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானந்த தனன தான தானந்த தனன தான
தானந்த தனன தான …… தனதான
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாய …… வரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவி …… விளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகி …… யிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாட …… அருள்தாராய்
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
சீரங் னெனது தாதை …… ஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சேர்பங்கி னமல நாத …… னருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
காடந்த மயிலி லேறு …… முருகோனே
காமன்கை மலர்கள் நாண வேலம்பெ ணமளி சேர்வை
காணெங்கள் பழநி மேவு …… பெருமாளே.
DivineInfoGuru.com