Thiruppugazh Song 164 – திருப்புகழ் பாடல் 164

திருப்புகழ் பாடல் 164 – பழநி

தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் …… தனதான

தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
தநுமுட் டவளைப் …… பவனாலே

தரளத் திரளிற் புரளக் கரளத்
தமரத் திமிரக் …… கடலாலே

உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
கொளிமட் குமிகைப் …… பொழுதாலே

உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
குனநற் பிணையற் …… றரவேணும்

திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
சிறையிட் டபகைத் …… திறல்வீரா

திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
திருவுக் குருகிக் …… குழைமார்பா

பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற் கொருசொற் …… பகர்வோனே

பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
பழநிக் குமரப் …… பெருமாளே.