Thiruppugazh Song 173 – திருப்புகழ் பாடல் 173

திருப்புகழ் பாடல் 173 – பழநி
ராகம் – வஸந்தா; தாளம் – அங்கதாளம் (6 1/2)
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2

தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன
தனனத்தன தான தந்தன …… தனதான

பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
பயிலப்பல காவி யங்களை ……யுணராதே

பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்
பசலைத்தன மேபெ றும்படி …… விரகாலே

சகரக்கடல் சூழ மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல் …… மெலியாமுன்

தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக வந்தருள் …… புரிவாயே

நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு …… மிளையோனே

நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
நொடியிற்பரி வாக வந்தவன் …… மருகோனே

அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு …… குருநாதா

அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி
அதனிற்குடி யாயி ருந்தருள் …… பெருமாளே.