திருப்புகழ் பாடல் 177 – பழநி
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் …… தனதான
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் …… திணையாய
புளகக் களபக் கெருவத் தனமெய்ப்
புணரத் தலையிட் …… டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவிற் பதடிக் …… கவமான
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் …… புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் …… கிளையோனே
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் …… பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் …… புனல்சேர்நீள்
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் …… பெருமாளே.