திருப்புகழ் பாடல் 194 – பழநி
ராகம் – ராமப்ரியா; தாளம் – அங்கதாளம் (6 1/2)
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2
தனனா தனனா …… தனதான
வரதா மணிநீ …… யெனவோரில்
வருகா தெதுதா …… னதில்வாரா
திரதா திகளால் …… நவலோக
மிடவே கரியா …… மிதிலேது
சரதா மறையோ …… தயன்மாலும்
சகலா கமநூ …… லறியாத
பரதே வதையாள் …… தருசேயே
பழனா புரிவாழ் …… பெருமாளே.