Thiruppugazh Song 212 – திருப்புகழ் பாடல் 212

திருப்புகழ் பாடல் 212 – சுவாமி மலை
ராகம் – பீம்பளாஸ்; தாளம் – ஆதி

தானனத் தனந்த …… தனதான

காமியத் தழுந்தி …… யிளையாதே
காலர்கைப் படிந்து …… மடியாதே

ஓமெழுத்தி லன்பு …… மிகவூறி
ஓவியத்தி லந்த …… மருள்வாயே

தூமமேய்க் கணிந்த …… சுகலீலா
சூரனைக் கடிந்த …… கதிர்வேலா

ஏமவெற் புயர்ந்த …… மயில்வீரா
ஏரகத் தமர்ந்த …… பெருமாளே.