திருப்புகழ் பாடல் 221 – சுவாமி மலை
ராகம் – ஆனந்த பைரவி; தாளம் – சதுஸ்ர த்ருவம் (14)
எடுப்பு /40/4/4
தனதன தனனா தனனா
தனந்த தத்தம் …… தனதான
தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் …… வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் …… மதியாலே
பெருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் …… கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ்ச லித்தும் …… விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் …… வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் …… முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் …… புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் …… பெருமாளே.