Thiruppugazh Song 222 – திருப்புகழ் பாடல் 222

திருப்புகழ் பாடல் 222 – சுவாமி மலை
ராகம் – காபி; தாளம் – அங்கதாளம் (13 1/2)
தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தானனந் தனதனன தனதனா தத்த தந்த …… தனதான

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து …… தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி …… மெலியாதே

மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து …… சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று …… பணிவேனோ

வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற …… குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு …… மணவாளா

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து …… புடைசூழுங்
கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த …… பெருமாளே.