Thiruppugazh Song 224 – திருப்புகழ் பாடல் 224

திருப்புகழ் பாடல் 224 – சுவாமி மலை

தனதன தான தந்த தனதன தான தந்த
தனதன தான தந்த …… தனதான

நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து
நிறைகுழல் மீத ணிந்து …… குழைதாவும்

நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்
நினைவற வேமொ ழிந்து …… மதனு஡லின்

கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து
கனியித ழேய ருந்தி …… யநுராகக்

கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு
கபடனை யாள வுன்ற …… னருள்கூராய்

உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு
முயர்கயி லாய மும்பொன் …… வரைதானும்

உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற
உமையரு ளால்வ ளர்ந்த …… குமரேசா

குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த
குமரக டோ ர வெங்கண் …… மயில்வாழ்வே

கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த
குருமலை மீத மர்ந்த …… பெருமாளே.