Thiruppugazh Song 226 – திருப்புகழ் பாடல் 226

திருப்புகழ் பாடல் 226- சுவாமி மலை
தனதன தானன, தனதன தானன
தனதன தானன …… தனதான

பரவரி தாகிய வரையென நீடிய
பணைமுலை மீதினி …… லுருவான

பணிகளு லாவிட இழையிடை சாய்தரு
பயிலிகள் வாள்விழி …… அயிலாலே

நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்
நிரைதரு மூரலி …… னகைமீது

நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்
நிலையெழ வேயலை …… வதுவாமோ

அரவணை யார்குழை பரசிவ ஆரண
அரனிட பாகம …… துறைசோதி

அமையுமை டாகினி திரிபுரை நாரணி
அழகிய மாதருள் …… புதல்வோனே

குரவணி பூஷண சரவண தேசிக
குககரு ணாநிதி …… அமரேசா

குறமக ளானைமின் மருவிய பூரண
குருகிரி மேவிய …… பெருமாளே.