திருப்புகழ் பாடல் 232 – சுவாமி மலை
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த …… தனதான
வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து
மாவலிவி யாதி குன்ம …… மொடுகாசம்
வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
மாதர்தரு பூஷ ணங்க …… ளெனவாகும்
பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
பாயலைவி டாது மங்க …… இவையால்நின்
பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து
பாவமது பான முண்டு …… வெறமுடி
ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று
ஈனமிகு சாதி யின்க …… ணதிலேயான்
ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்
ஈரஅருள் கூர வந்து …… எனையாள்வாய்
சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
சூழமதில் தாவி மஞ்சி …… னளவாகத்
தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த
சுவாமிமலை வாழ வந்த …… பெருமாளே.