Thiruppugazh Song 254 – திருப்புகழ் பாடல் 254

திருப்புகழ் பாடல் 254 – திருத்தணிகை

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் …… தனதான

கடற்செகத் தடக்கிமற் றடுத்தவர்க் கிடுக்கணைக்
கடைக்கணிற் கொடுத்தழைத் …… தியல்காமக்

கலைக்கதற் றுரைத்துபுட் குரற்கள்விட் டுளத்தினைக்
கரைத்துடுத் தபட்டவிழ்த் …… தணைமீதே

சடக்கெனப் புகத்தனத் தணைத்திதழ்க் கொடுத்துமுத்
தமிட்டிருட் குழற்பிணித் …… துகிரேகை

சளப்படப் புதைத்தடித் திலைக்குணக் கடித்தடத்
தலத்தில்வைப் பவர்க்கிதப் …… படுவேனோ

இடக்கடக் குமெய்ப்பொருட் டிருப்புகழ்க் குயிர்ப்பளித்
தெழிற்றினைக் கிரிப்புறத் …… துறைவேலா

இகற்செருக் கரக்கரைத் தகர்த்தொலித் துரத்தபச்
சிறைச்சியைப் பசித்திரைக் …… கிசைகூவும்

பெடைத்திரட் களித்தகுக் குடக்கொடிக் கரத்தபொய்ப்
பிதற்றறப் படுத்துசற் …… குருவாய்முன்

பிறப்பிலிக் குணர்த்துசித் தவுற்றநெற் பெருக்குவைப்
பெருக்குமெய்த் திருத்தணிப் …… பெருமாளே.