திருப்புகழ் பாடல் 255 – திருத்தணிகை
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் …… தனதான
கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங்
கரிக்குவ டிணைக்குந் …… தனபாரக்
கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங்
கலைத்துகில் மினுக்யும் …… பணிவாரைத்
தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந்
தவிர்த்துனது சித்தங் …… களிகூரத்
தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன்
தலத்தினி லிருக்கும் …… படிபாராய்
புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண்
பொடிப்பணி யெனப்பன் …… குருநாதா
புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின்
புகழ்ச்சிய முதத்திண் …… புலவோனே
திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந்
தெறிப்புற விடுக்குங் …… கதிர்வேலா
சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென்
திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.
DivineInfoGuru.com