Thiruppugazh Song 259 – திருப்புகழ் பாடல் 259

திருப்புகழ் பாடல் 259 – திருத்தணிகை
ராகம் – கானடா; தாளம் – அங்கதாளம் (11 1/2)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2

தனத்த தத்தனத் தந்த தாத்தன …… தந்ததான

கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட …… லொன்றினாலே
கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு …… திங்களாலே

தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச …… ரங்களாலே
தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச …… ழங்கலாமோ

தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம …… டந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் …… கந்தவேளே

பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய …… மங்கைபாகா
படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் …… தம்பிரானே.