Thiruppugazh Song 263 – திருப்புகழ் பாடல் 263

திருப்புகழ் பாடல் 263 – திருத்தணிகை

தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன …… தனதான

குருவி யெனப்பல கழுகு நரித்திரள்
அரிய வனத்திடை மிருக மெனப்புழு
குறவை யெனக்கரி மரமு மெனத்திரி …… யுறவாகா

குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
கொடுமை யெனப்பிணி கலக மிடத்திரி
குலைய னெனப்புலை கலிய னெனப்பலர் …… நகையாமல்

மருவு புயத்திடை பணிக ளணப்பல
கரிபரி சுற்றிட கலைகள் தரித்தொரு
மதன சரக்கென கனக பலக்குட …… னதுதேடேன்

வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
அமையு மெனக்கிட முனது பதச்சரண்
மருவு திருப்புக ழருள எனக்கினி …… யருள்வாயே

விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு …… வெகுதாளம்

வெருவ முகிழ்த்திசை யுரகன் முடித்தலை
நெறுநெ றெனத்திசை யதிர அடைத்திட
மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட …… விடும்வேலா

அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
அயனை முடித்தலை யரியு மழுக்கையன்
அகில மனைத்தையு முயிரு மளித்தவ …… னருள்சேயே

அமண ருடற்கெட வசியி லழுத்திவி
ணமரர் கொடுத்திடு மரிவை குறத்தியொ
டழகு திருத்தணி மலையில் நடித்தருள் …… பெருமாளே.