திருப்புகழ் பாடல் 265 – திருத்தணிகை
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் …… தனதான
குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
குடையிட் டகுறைப் …… பிறையாலே
குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்
குயிலுக் குமினித் …… தளராதே
இவளைத் துவளக் கலவிக் குநயக்
திறுகத் தழுவிப் …… புயமீதெ
இணையற் றழகிற் புனையக் கருணைக்
கினிமைத் தொடையைத் …… தரவேணும்
கவளக் கரடக் கரியெட் டலறக்
கனகக் கிரியைப் …… பொரும்வேலா
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
கலவிக் கணயத் …… தெழுமார்பா
பவளத் தரளத் திரளக் குவைவெற்
பவையொப் புவயற் …… புறமீதே
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
பதியிற் குமரப் …… பெருமாளே.