திருப்புகழ் பாடல் 267 – திருத்தணிகை
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன …… தனதான
கூர்வேல் பழித்தவிழி யாலே மருட்டிமுலை
கோடா லழைத்துமல …… ரணைமீதே
கோபா விதழ்ப்பருக மார்போ டணைத்துகணை
கோல்போல் சுழற்றியிடை …… யுடைநாணக்
கார்போல் குழற்சரிய வேவா யதட்டியிரு
காதோ லையிற்றுவிழ …… விளையாடுங்
காமா மயர்க்கியர்க ளூடே களித்துநம
கானு ருறைக்கலக …… மொழியாதோ
வீராணம் வெற்றிமுர சோடே தவிற்றிமிலை
வேதா கமத்தொலிகள் …… கடல்போல
வீறாய் முழக்கவரு சூரா ரிறக்கவிடும்
வேலா திருத்தணியி …… லுறைவோனே
மாரோ னிறக்கநகை தாதா திருச்செவியில்
மாபோ தகத்தையருள் …… குருநாதா
மாலோ னளித்தவளி யார்மால் களிப்பவெகு
மாலோ டனைத்துமகிழ் …… பெருமாளே.