Thiruppugazh Song 274 – திருப்புகழ் பாடல் 274

திருப்புகழ் பாடல் 274 – திருத்தணிகை
ராகம் – பெஹாக்; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12)
(எடுப்பு – அதீதம்)

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் …… தனதான

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் …… குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் …… பிணிதோயும்

இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் …… பிறவாதே

எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் …… தரவேணும்

தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் …… களைவோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் …… தனிவேலா

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் …… தணைவோனே

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் …… பெருமாளே.