Thiruppugazh Song 275- திருப்புகழ் பாடல் 275

திருப்புகழ் பாடல் 275 – திருத்தணிகை
ராகம் – சுப பந்துவராளி; தாளம் – சதுஸ்ர ஏகம் (4 களை) (16)

தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தத்தனாத் தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன …… தனதான

தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
துக்கமாற் கடமு …… மலமாயை

துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பலச …… மயநூலைக்

கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
லப்புலாற் றசைகு …… ருதியாலே

கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
சட்டவாக் கழிவ …… தொருநாளே

அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு …… நிவனாய

அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல்
வெற்பபார்ப் பதிந …… திகுமாரா

இக்கணோக் குறில்நி ருத்தநோக் குறுத
வத்தினோர்க் குதவு …… மிளையோனே

எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய …… பெருமாளே.