Thiruppugazh Song 279 – திருப்புகழ் பாடல் 279

திருப்புகழ் பாடல் 279 – திருத்தணிகை
ராகம் – தந்யாசி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2

தனன தானனம் தனன தானனம்
தனன தானனம் …… தனதான

பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண் …… டுடல்பேணிப்

பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ் …… சிலவோதி

அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந் …… தடைவோரை

அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந் …… திடலாமோ

சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகி லாதசெங் …… கழுநீருந்

தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங் …… கதிர்வேலா

சிகர பூதரந் தகர நான்முகன்
சிறுகு வாசவன் …… சிறைமீளத்

திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும் …… பெருமாளே.