Thiruppugazh Song 282 – திருப்புகழ் பாடல் 282

திருப்புகழ் பாடல் 282 – திருத்தணிகை

தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் …… தனதான

புருவ நெறித்துக் குறுவெயர் வுற்றுப்
புளகித வட்டத் …… தனமானார்

பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
புரளு மசட்டுப் …… புலையேனைக்

கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்
கதிதனை விட்டிட் …… டிடுதீயக்

கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
கழல்கள் துதிக்கக் …… கருதாதோ

செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
திரைகட லுட்கப் …… பொரும்வேலா

தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
கொடிதன வெற்பைப் …… புணர்மார்பா

பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
பெரிகை முழக்கப் …… புவிமீதே

ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்
ப்ரியமிகு சொக்கப் …… பெருமாளே.